குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரியாமிகா இவருக்கு வயது 26 .சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். குன்றத் திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் சரியாக போகவில்லை.ஆனால் எக்ஸ் வீடியோஸ் படம்தான் அவரை ஓரளவு பிரபலப்படுத்தியது..இந்நிலையில் இன்று நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சரியான பட வாய்ப்புகள் வராத காரணத்தால் தற்கொலை என முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரியாமிகாவின் தற்கொலை திரையுலகில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.