“அவதான் பஜாரி” என்று எதிரில் வந்தவளைக் கை காட்டினால் ” நீ வாடி உள்ளே ,பார்ட்டி வெயிட்டிங்! மத்தவளை அப்புறம் பார்க்கலாம்” என்று வீட்டுக்குள் இழுத்துக்கொண்ட கதையாகி விட்டது அந்தப் பெண்ணின் கதை.!
“மிட் நைட்டில் வந்தார் ,அந்த டான்ஸ் பார்ட்டி வீட்டுக்குப் போனார், விடிகாலையில் சுவர் எகிறி குதித்து ஓடினார்”என்று ஒரு புகாரை கோபாலபுரம் ஏரியாவை சேர்ந்த திவ்யதர்ஷினி என்கிற பெண் கிளப்பியது நினைவிருக்கலாம் .இதை சிலர் பட்டாசு வெடித்து பரபரப்பாக்கினார்கள்.
கைவசம் நிறைய மேட்டர் இருக்கிறது விஷாலைப் பத்தி சொல்ல என்றும் அந்த பெண் சொன்னார்.
இப்ப அந்த பெண்ணையே போலீசார் அள்ளிக்கொண்டு போய் இருக்கிறார்கள்.
பக்கத்து வீட்டு சின்னப்பிள்ளை மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு இழிவு படுத்தி இருக்கிறார் திவ்யதர்ஷினி.
தேசிய குழந்தைகள் ஆணையத்துக்குப் புகார் போயிருக்கிறது. இதை தொடர்ந்து ராயப்பேட்டை போலீசார் ‘போக்சோ’சட்டத்தின்படி திவ்யதர்ஷினியை கைது செய்திருக்கிறார்கள்.
இந்த எகிறல் எப்படி இருக்கிறது?