தமிழகத்தின் தற்போதைய அரசியலை அலசிக் காயப்போடுவதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக கூட்டி இருந்தது. “திமுகவின் கூட்டணியில் இல்லை “என்று துரை.முருகன் சொன்ன மதிமுக, விசிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வைகோ,திருமா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த கூட்டத்திற்கு புதிய கட்சி தொடங்கி இருக்கிற கமல்ஹாசனுக்கு அழைப்பு இல்லை. மக்கள் நீதி மய்யத்தை ஒரு கட்சியாக திமுக மதிக்கவில்லை என்பதின் வெளிப்பாடே இந்த புறக்கணிப்பு என புரிந்து கொள்ளலாம். இது பற்றி கமல்ஹாசனிடம் கேட்டதற்கு “அழையாவீடு”என ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார்.
இதற்கு திமுகவின் பதில் என்னவாக இருக்கிறது?
“ஏற்கனவே எங்களுடன் போராட்டங்களில் கலந்து கொண்ட கட்சிகளை மட்டுமே எங்களால் அழைக்க முடிந்தது.ஏனைய கட்சிகளை அழைக்க முடிய வில்லை” என்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.