கல்கியின் அமர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ சரித்திரநாவலின் கதாநாயகன் வந்தியத்தேவனாக நடிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் விரும்பினார். அதே ஆசைகமல் ஹாசனுக்கும் இருந்தது., இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக இயக்கும் ஆரம்பக் கட்டப் பணிகளில் இறங்கி, பிறகு அதன் பிரமாண்டம் கருதி கைவிட்டார். இந்நிலையில் மீண்டும் இப்படத்தை இயக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இப் படத்துக்காக விஜய்யை தன் அலுவலகத்துக்கு அழைத்து,விஜய்யின் கதாபாத்திரமான வந்தியத்தேவன் கெட்டப்பில் போட்டோ ஷூட் ஒன்றையும் முடித்திருக்கிறார் மணிரத்னம். கதாபாத்திர வடிவமைப்பு எப்படியிருந்தால் அவருக்குப் பொருந்துகிறது என்பதை இதில் முடிவு செய்ததாகத் தெரிவித்தனர்.விக்ரம் மற்றும் சிம்பு இருவரையும் வைத்து முறையே,அருள்மொழிவர்மன்,கந்தமாறன் ஆகிய கதாபாத்திரங்களுக்காக விரைவில் இதே போன்றதொரு போட்டோ ஷூட்டும் விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது. பழுவேட்டரையராக சத்யராஜ் நடிக்கலாம் என்கிறார்கள்.மேலும் இதில்,விஜய் சேதுபதி ,பார்த்திபன், சிபிராஜ், ஜெயம்ரவி,பிரகாஷ் ராஜ் ஆகியோரையும் நடிக்க வைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.குந்தவை,நந்தினி ,மந்தாகினி உள்ளிட்ட முக்கிய கேரக்டர்களுக்கும் நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனராம்.இப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.