எவர்க்ரீன் கலெக்சன் கிங் சிவகார்த்திகேயனின் அடுத்த தயாரிப்பு அட்டகாசமாக தொடங்கி இருக்கிறது.
அவரது கனா இந்த டிசம்பரில் ரிலீசாகிறது.
சிவாவின் புதிய படத்தின் ஹீரோ டி.வி .பிரபலம் ரியோ. இயக்கம் கார்த்திக் வேணு கோபாலன். இந்த தயாரிப்பில் ஷெரினுடன் இரண்டு முரட்டு அரசியல்வாதிகளும் நடிக்கிறார்கள்.
ஒருவர் அஞ்சாநெஞ்சன் அடங்க மறுக்கும் ராதாரவி, இன்னொருவர் இன்னோவா புகழ் நாஞ்சில் சம்பத். இவருக்கு முதல் படம். பொலிடிகல் பீவர் இருக்கும் என்று நம்பலாம்.
மோடியை படம் பிடித்து பிரசாரத்துக்கு அனுப்பி வைத்த யுகே செந்தில்குமார்தான் ஒளிப்பதிவு. சிவகார்த்திகேயன் கலக்கும் புதிய படம் மித்திரன் இயக்கத்தில் புத்தாண்டில் ஆரம்பம் ஆகிறது.