சக்கைப் போடு போடுகிறது 2 பாயின்ட் ஓ .திரையிட்ட இடங்கள் எல்லாமே வசூல் மழை. பாராட்டுகள். பாலிவுட்வாலாக்களே பிரமித்துப்போய் இருக்கிறார்கள். ஷங்கருக்கு ‘பாரத்’ விருது நிச்சயம் என்கிறது பட்சி.
ஷங்கரின் பட கேரக்டர்கள் வெறும் கற்பனையாக இருப்பதில்லை. வாழ்ந்தவர்கள் எவரேனும் காரணமாக இருப்பார்கள். இந்த படத்தின் பட்சிராஜன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்து மறைந்த மும்பை வாழ் இந்தியரை அடிப்படையாகக்கொண்டு உருவானதுதான்!.
அவரது பெயர் சலீம் மொய்சுதீன் அப்துல் சலீம்.
பறவைகள் ஆராய்ச்சியாளர். இவரது முயற்சியால் பறவையின காப்பகம் உருவாகியிருக்கிறது. பசுமை பள்ளத்தாக்கு அழிந்துவிடக்கூடாது என்று போராடியவர்களில் முக்கியமானவர்..இவருக்கு இந்திய அரசு பாரத விருது வழங்கி அஞ்சல் தலையும் வெளியிட்டிருக்கிறது.
இவரது முகத் தோற்றம் மாதிரிதான் அக்சய் குமாருக்கு படத்தில் ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறது.