“தவறிழைத்துவிட்டேன் “என சொல்லி அரியணையில் இருந்து உருண்டு விழுந்து உயிர் விடுவதற்கு நெடுஞ்செழியன் இனி பிறக்கப் போவதில்லை.
குற்றமற்றவர்கள் நாங்கள் என வாதாடுவதற்கு வழியும் இல்லை
.”ஆயுள் தண்டனை!” என அரச மன்றமே தீர்ப்பளித்து விட்டது.
ஆயுள் தண்டனை பெற்ற சராசரி மனிதர்களைப் போல அந்த ஏழு பேரையும் கவனியுங்கள் இரக்கம் காட்டுங்கள் என்றுதான் எல்லோருமே கேட்கிறார்கள்.
தீ நாக்குகளுக்குள் தள்ளியவர்களை விடுதலை செய்யும் கருணை உள்ள மனசுக்கு 7 பேரை விடுவிக்கும் மனசு இல்லையா?
இதோ, சீதக்காதி தமிழன் விஜயசேதுபதியின் விண்ணப்பம்.!
“இதை தமிழர் பிரச்னையாகப் பார்க்காதீர்கள். மனித உரிமை என்கிற மனிதாபிமான அடிப்படையில் பரிசீலியுங்கள். தயவு செய்து இரக்கம் காட்டுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுங்கள்” என தனது சமூக வலைப்பதிவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.