நடிக்கும்போது கிடைக்காத பப்ளிசிட்டி தற்கொலை செய்து கொண்டால் பெரிய அளவில்கிடைக்கும் ,இது திரை உலகத்தின் தலைஎழுத்து.!
ரியாமிகா மட்டும் விதிவிலக்கா!
இரண்டே படங்கள்தான் நடித்திருக்கிறார். அதில் எக்ஸ் வீடியோஸ் படம்தான் அவரது பிம்பத்தை பெரிதாக்கியது. ஆனாலும் வாய்ப்புகள் வரவில்லை. இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஒரு யூகம் எழுந்தது.
அவரது காதலர் தினேஷை விசாரித்தால் விவரம் தெரியவரும் என்று சொன்னார்கள் .போலீசார் விசாரணையில் யாரோ ஒரு எக்ஸ் மனிதர் காரணமாக இருந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
வெளியில் இரண்டு நாட்கள் எங்கேயோ தங்கி இருந்திருக்கிறார், அந்த நாளில் போனில் தொடர்பு கொண்டபோது சரியாக பேசவில்லை என்று தினேஷ் போலீசில் சொன்னதாக தெரிகிறது. அந்த இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய பின்னர்தான் தற்கொலை நடந்திருக்கிறது .
அந்த இரண்டு நாள் ,எங்கே,ஏன் தங்கி இருந்திருக்கிறார்?
மர்மமாக இருக்கிறது.