ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு,எஸ்.ஆர்.பிரபு,தயாரித்திருக்கும் பிரமாண்டமான படம்தான் ‘என்.ஜி.கே.’
சூர்யா,ரகுல் பிரீத் நடித்திருக்கிறார்கள். செல்வராகவனின் இயக்கம் யுவன்சங்கர் ராஜா இசை என வளர்ந்து வரும் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
புரட்சி வீரன் சே குவேராவைப் போல சூர்யாவை சித்தரித்து சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார்கள்.
இந்த படத்திற்காக ஸ்ரேயா கோஷல்,சித் ஸ்ரீ ராம் பாடிய ஒரு பாடல் முடிவடைந்து விட்டதாக யுவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு செல்வராகவன் மகிழ்ச்சி தெரிவித்து “இம்மாதிரி ஆசிவதிக்கப்பட்ட பாடகர்கள் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என நெகிழ்ந்து போயிருக்கிறார்.