ராணி ஜான்சிபாயாக நடித்திருப்பவர் கங்கனா ரனாவத்.
கடுமையான ஆள்.
மனிகர்ணிகா படத்தில் ஜான்சிராணியாக நடித்திருக்கிறார். இந்த படம் புத்தாண்டில் 15 ம் தேதி வரவேண்டும்.
அதற்குள் படத்துக்குப் பேரிடர் கஜா புயல் மாதிரி!. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை
இதனால் அவர்கள் ஒத்துழைப்புத் தரவில்லை. படத்தின் வேலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட நாளில் படம் வருமா என்பது சந்தேகம்.!
கதாநாயகியாக நடித்திருக்கிற கங்கனா ரனாவத் என்ன சொல்கிறார்?
“தொழிலாளர்களுக்கு பணத்தைப் பட்டுவாடா பண்ணாவிட்டால் நான் ஒத்துழைப்புத் தரமாட்டேன். படத்தின் புரமோஷன்களுக்கு வரமாட்டேன்.”என்பதாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.