“கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.” என்று சொன்ன கமல்ஹாசனுக்கு வழக்கம் போல கோடி அர்ச்சனை செய்திருக்கிறார் மந்திரி செல்லூர் ராசு.!
“தமிழக அரசு அதி வேகமாக செயல்பட்டு வருகிறது கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகிறது கூர்மையான அரசு.! மூளையில் கோளாறு உள்ள கமல்ஹாசனுக்குஇதெல்லாம் தெரியாது” என்று கடுமையாக காய்ச்சி இருக்கிறார் மந்திரி செல்லூர் ராசு. “எதுவுமே செய்யவில்லை ”என சொல்லி மந்திரிகளை ஊருக்குள்ளேயே வரவிடாமல் செய்ததெல்லாம் செல்லூர் ராசுவுக்கு மறந்து விட்டது போலும்.!
இது ஒரு பக்கம் இருக்க கல்வி மந்திரி செங்கோட்டையன் புதிதாக ஒரு உத்திரவு போட்டிருக்கிறார். மாணவிகள் கொலுசு போடக்கூடாது.அதனால் மாணவர்களின் கவனம் சிதறி விடும் ” என்பதாக.! மகளிர் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இது பொருந்துமா என்பது தெரியவில்லை. மாணவர்களை மந்திரி எவ்வளவு மட்டமாக எடை போட்டிருக்கிறார் பாருங்கள்.! இப்போதெல்லாம் மாணவிகளின் காலில் கொலுசு எங்கே இருக்கிறது?நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் கம்மலை கழற்ற சொல்கிறவர்களுக்கு சிந்தனை இப்படித்தான் செல்லும்?