சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் உலக அழகியில் இருந்து உள்ளூர் அழகி வரை ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள்.
சூப்பர் லேடி ஸ்டார் எனப்பட்ட ஸ்ரீ தேவியும் நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யாராய்,தீபிகா படுகோனே, ரேகா,ஜெயபிரதா ராதா, அம்பிகா, ராதிகா என எண்ணிக்கை மிகவும் நீளம்.
புதுக்கவிதை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த ஜோதியின் அம்மா பெருமையுடன் “என் மகளை விட சூப்பர் ஸ்டாருக்கு பொருத்தமான நடிகை வேறு யாரும் இல்லை” என சொல்லி பெருமைப்பட்ட காலமும் உண்டு.
இப்படி ஒவ்வொரு நடிகையும் தாங்களே அவருக்கு பொருத்தமான ஜோடி என நினைத்திருக்கலாம்.
ஆனால் அவர் மனதில் இடம் பிடித்திருந்த நடிகை யார்?
அவரே சொல்லி இருக்கிறார்.படாபட் ஜெயலட்சுமிதான் அவருக்குப் பிடித்தமான நடிகை என!
அவரது குரு மறைந்த பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர் படாபட் ஜெயலட்சுமி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியின் மகனை காதலித்து தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டவர். அந்த படாபட் ஜெயலட்சுமிதான் சூப்பர் ஸ்டாரின் அபிமான நடிகை.!