காலக்கொடுமை சார்.! கல்யாணம் நடந்து கணவனுடன் வாழ்ந்தாச்சு. கசந்து போச்சு வாழ்க்கை. வாங்க வேண்டிய விவாகரத்தையும் வாங்கியாச்சு.அப்புறம் என்ன அடுத்த இன்னிங்ஸ் ஆடணும்னு ஆசை வந்திருச்சி. வரும் .வரத்தானே செய்யும்.
காலம் பூரா கல்யாணம் இல்லாம இருக்க முடியுமா? அந்த கவர்ச்சி நடிகைக்கு ஆசை வந்தது தப்பு இல்ல. ஆனா நான் இன்னும் கன்னி கழியலன்னு சர்டிபிகேட் வாங்கினாங்க பாருங்க.அங்கதாங்க நமக்கு எதுவுமே புரியல.!
ராக்கி சாவந்த். இந்தியில் கவர்ச்சி நடிகை.அயிட்டம் டான்சர்.தமிழில் முத்திரை என்கிற படத்தில் ஆடி இருக்கிறார்.குடியரசு கட்சி பிரமுகி. தற்போது இவருக்கு நாற்பது வயது.
அந்த காலத்து இளவரசிகளுக்கு சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளையை தெரிந்தெடுப்பார்கள் என படித்திருக்கிறோம்.அதைப் போல ராக்கியும் சுயம்வரம் நடத்தி பர்ஜூன் என்பவரை தேர்வு செய்தார். பல மாதங்கள் வாழ்ந்த பின்னர் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
“பணத்துக்காகத்தான் அவரை தேர்ந்தெடுத்ததாக சொன்னார் .முதல் பாகம் இத்துடன் முடிந்து போனது.
அடுத்து தற்போது இன்டர்நெட் புலி, டி.வி.பெர்சனால்டி தீபக் ஹலால் என்பவரை கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்காவில் கல்யாணமாம்.
இதில் என்ன வேடிக்கை என்றால் இருவருமே ‘வர்ஜின்’ என்பதாக டாக்டர் சர்டிபிகேட் வாங்கி இருக்கிறார்கள். இருவருமே நாற்பதைக் கடந்தவர்கள்.