மீ டூ பிரச்னையின் அனல் இன்னும் தணிந்த பாடாக இல்லை.
“பணத்துக்காக வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டுகிறார் சின்மயி”என்று ராதாரவி சொன்னதற்குப் பின்னர் இருவருக்குமான அறிக்கைப் போர் நின்ற பாடில்லை.
“ராதாரவிக்கு ‘டத்தோ’விருது கொடுக்கவே இல்லை. பொய்யாக போட்டுக் கொண்டிருக்கிறார்”என ஒரு கடிதத்தையும் வெளியிட்டிருந்தார் சின்மயி. அந்த கடிதம் மலேசிய அரசு வட்டத்திலிருந்து பெறப்பட்டது போல இருந்தது.
இது பற்றி ராதாரவியிடம் கேட்டதற்கு “அந்த கடிதமே பொய்யானதாக இருந்தாலும் ஆச்சரியமில்லை. யார் யார் விருது கொடுக்கிறாங்க என்பது கூட தெரியாமல் பொய் சொல்லிவருகிறார் சின்மயி.என்னிடம் ஆதாரம் இருக்கிறது. விரைவில் வெளியிடுவேன்.தற்போது வெளியூர் பயணத்தில் இருக்கிறேன் “என்று தெரிவித்தார் ராதாரவி.