கலைஞர் ,புரட்சித் தலைவி மறைவுக்குப் பிறகு கோலிவுட்டில் அரசியல் காய்ச்சல் அதிகமாகவே பரவி இருக்கிறது.
பட்ட அவதிகளுக்குப் பரிகாரம் தேட ஆரம்பித்திருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.
ஆட்சி,அதிகாரத்தை வைத்துக் கொண்டு குடைச்சல் கொடுத்தவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். கிடைத்த வாய்ப்பை வைத்துக் கொண்டு வசனங்களிலும் காட்சிகளிலும் காரத்தை கொட்டத் தொடங்கிவிட்டார்கள் கோலிவுட்டில்.!
அதன் பிரதிபலிப்புதான் சர்கார் . அதற்கு முன்னர் வந்த சில படங்களிலும் அரசாங்கத்தை விமர்சனம் செய்திருந்தார்கள்.
ஆனால் சர்காரில் இலவசங்களைப் போட்டு தாக்கியதால் அரசுக்கு ஆத்திரம் வந்து கட்சிக்காரர்களை வைத்து கலாட்டா நடத்தி விட்டது.
இதைப்போல அரசியல் கட்சி நடத்தும் கமல்,ரஜினி, ஆகியோர் படங்களில் இயக்குநர் ஷங்கர் காட்சிகள் அமைப்பாரா,வசனங்களில் வம்புச்சண்டை இழுப்பாரா?
ஷங்கர் என்ன சொல்கிறார்?
“கமல் சாரின் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாடியே நான் இந்தியன் 2 ஸ்கிரிப்ட்டை முடிச்சாச்சு. கமல் சார்,ரஜினிசார் பொலிடிக்கல் இமேஜ்க்காக நான் சீன் வைக்கவோ ,எடுக்கவோ மாட்டேன்.ஆனால் முதல்வன் 2 எடுப்பதாக இருந்தால் அந்த கதைக்கு எனது ஜாய்ஸ் ரஜினி ஸார்தான்” என்கிறார் ஷங்கர்.