தளபதி 63 படத்தின் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.
ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தின் பெயர் வழக்கம்போல வைக்கப்படவில்லை.
இந்த படத்தில் தளபதி விஜய் ஸ்போர்ட்ஸ்மேனாக வருகிறார் என்கிறார்கள். இதற்காக அவருக்கு தனிப் பயிற்சியாளரை அட்லி நியமித்திருக்கிறார்.
விஜய்க்கு ஜோடி நயன்தாரா என்பதால் பெண்ணுரிமை தொடர்பான கருத்துகளும் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அரசியல் இல்லாமல் இருக்குமா? விவேக் ,யோகிபாபு இருவரும் தனித்தனி டிராக் அல்லது கவுண்டமணி செந்தில் மாதிரி டிராக்கா என்பது தெரியவில்லை. இசை ஏஆர்ரகுமான்.