அக்கா,தங்கச்சியா இருந்தாலும் ஒத்த புருசனுக்கு வாக்கப்பட்டா ரத்தபாச உறவு அந்த சங்கதியில அறுந்திடும்னு சொல்வாங்க. பகல்ல சிரிப்பும் ராத்திரியில் கண்ணீருமா கடந்திடும்னு சொல்வாங்க.
அது மாதிரி ரெண்டு ஹீரோயின்கள் ஒரே மாநிலமாக இருந்தாலும்ஒரே படத்தில் சம பங்கு இல்லேன்னா சந்தி சிரிச்சிடும் என்பது உண்மைதான்..!
தோள் மீது தோள் போட்டு பேசிக்கொள்கிறவர்கள் “ஷாட் ரெடி ! “என்றதும் துருவங்களாகி விடுவார்கள். காஜல் அகர்வால் கதையும் அப்படித்தான் என்கிறது யூனிட்.!
கவசம் படத்தில் காஜல் மெஹ்ரீன் இருவரும் நடிக்கிறார்கள். பஞ்சாபிகள்.
ஆனால் “மெஹ்ரீன் வந்தா ஆடியோ பங்ஷனுக்கு நான் வரமாட்டேன்”என்று சொன்னதால் மெஹ்ரீன் இல்லாமல் அந்த விழா நடந்திருக்கு.
துபாயில் பாடல் காட்சி படப்பிடிப்பு. மெஹ்ரீன் போர்ஷன் முடிந்து ஊர் திரும்பிய பின்னர்தான் காஜல் துபாய் போயிருக்கிறார்.
இரண்டு பேருக்கும் இடையில் ஈகோ சண்டை என்கிறார்கள்.
ஆனால் கவசம் யூனிட் கடுமையாக மறுக்கிறது.
அவர்கள் மத்தியில் அப்படியெல்லாம் ஈகோ சண்டை இல்லை என்கிறார்கள்.
கட்டி விட்ட கதையா,அல்லது கமுக்கமாக அமுக்க பார்க்கிறார்களா என்பதை காஜல்-மெஹ்ரீன் சொன்னால்தான் தெரியும்!