எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படம் என்.ஜி.கே. செல்வராகவனின் இயக்கம்.
மிகவும் எதிர்பார்க்கப்படுகிற படம்.
எல்லோரும் அரசியல் பேசுகிறபோது சூர்யா மட்டும் பேசாமல் இருந்தால் எப்படி? அனல் தெறிக்கிற வசனங்கள் பேசுகிறாராம். அரசியலில் புரட்சி செய்கிற கேரக்டர்.இதுவரை செய்திராத வேடம்.
சாய்பல்லவி, ரகுல்பிரீத் என இரட்டை நாயகிகள். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நேற்றுதான் தொடங்கியது. கோடையில் ரிலீஸ்.அரசியல் படமல்லவா சூடாகத்தான் இருக்கும் .அதான் புதுவருடத்தில் வருகிறார் என்.ஜி.கே.