நம்ம ஆளுங்களின் ரசனை கடவுளுக்கும் கற்பூரம், கவர்ச்சிக்கும் ஆராதனை என்கிற ரேஞ்சில் போய்க் கொண்டிருக்கிறது.
பரியேறும் பெருமாளுக்கும் பரிவட்டம் காட்டுவாங்க. ‘
‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்துக்கும் மண்டகப்படிகட்டுவாங்க.
நடிகர் விமலின் கேரியரில் ‘இ.எ. மச்சம்’ படம் மாதிரி வியாபாரம் எந்த படத்துக்கும் நடந்ததில்லை.
தீயாய் சுடுகிறது .!போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்குகிறார்கள். எல்லா ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்ற மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் இருக்கிறார்.
கடனை ஓரளவுக்கு அடைத்த சந்தோஷத்தில் விமல் இருக்கிறார். சொந்தமாக படம் எடுத்து சூனியம் வைத்துக் கொண்டவர். அடல்ட் காமடி இவருக்கு மருந்து ஆகியிருக்கிறது.