சாவித்திரியின் பயோபிக் படமான நடிகையர் திலகம் வெளியானதும் பலருக்கு ஜெயலலிதாவின் வரலாற்றைப் படமாகும் ஆசை வந்தது.
ஏஎல்.விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் படமாக்கபோவதாக அறிவித்தனர் .
ஆனால் இயக்குநர் பிரியதர்ஷிணியின் அறிவிப்புதான் உறுதியானது. நித்யாமேனன் தனது இயக்கத்தில் ஜெயலலிதாவாக நடிக்கபோவதாக அறிவித்தார்.
இன்று ஜெயாவின் இரண்டாவது நினைவுநாள்
இந்தியாவின் மார்கரெட் தாட்சர் என அடைமொழியிட்டு படத்தின் முதலாவது போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். நித்யாமேனனை இளம்வயது ஜெயலலிதாவாக சித்தரித்திருக்கிறார்கள்.அசப்பில் அசலாகாவே தெரிகிறார். படத்தை இயக்கும் பிரியதர்ஷிணி இயக்குநர் மிஸ்கினிடம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.படத்தின் பெயரை ஆங்கிலத்தில் ‘அயர்ன் லேடி ‘என வைத்திருக்கிறார்கள்.