அரசாங்கத்தை எதிர்த்தால் எந்த பக்கம் இருந்து கத்தி பாயும் என்பது தெரியாது. பெருச்சாளி பொந்து வழியாக கூட புகார் வரும். பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த குழாயடி சண்டை கூட குற்றப்பத்திரிகையாக வரும். விதி வலியது முருகதாஸ்!
அன்புராஜசேகர் இயக்கிய *தாகபூமி* குறும்படத்தை திருடி *கத்தி* திரைப்படமாக எடுத்ததாக முருகதாஸ் மீது காப்புரிமை சட்டத்தின்படி *குற்றவியல் நடவடிக்கை* எடுக்ககோரி தமிழக முதல்வர் இல்ல அலுவலகத்தில் கடந்த நவ.22ந்தேதி புகார் மனு அளிக்கப்பட்டது.புகார் மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்ககோரி முதல்வர் பிரிவு அலுவலர் கடிதம் ஒன்று திநகர் போலீஸ் டெபுடி கமிஷனர் கவனத்திற்கு அனுப்பப்பட்டது.புகார் மனு சரிபார்க்கப்பட்டு வளசரவாக்கம்அசிஸ்டென்ட் கமிஷனர் கவனத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது
மனு தொடர்பாக வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள அசிஸ்டென்ட் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அடுத்து என்ன நடக்கும் முருகதாசை ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிப்பார்கள். மேலிடத்து உத்திரவு எப்படி வருகிறதோ அப்படி கவனிக்கப்படுவார் முருகதாஸ்.