வலுத்தவனுக்கு எதிராக களம் இறங்குகிறவன் பலசாலியாக இருந்துவிட்டால் வலுத்தவன் கை இறங்கிப்போகும் ,ஆளும் பலவீனமாகிவிடுவான் என்பார்கள் .அது உண்மைதான் போலிருக்கிறது.ரெகுலேஷன் கமிட்டி போட்டு சின்னபடங்களைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று இறங்கிய தயாரிப்பாளர்கள் சங்கம் விஜய் ஆண்டனிக்கு ரெட் போட்டதுதான் மிச்சம். பலசாலி தனுஷிடம் சங்கத்தின் சட்டங்கள் வளைந்து போய்விட்டது. டிசம்பர் 2 1 ம் தேதி வருவேன் என்று அறிவிப்பு செய்தவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்று கூடிய சங்கத்தின் கூட்டத்தில் ஜனவரி 14 ம் தேதி வரை யாரும் எவ்வித கட்டுப்பாடுமில்லாமல் படங்களை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என சொல்லி விட்டார்களாம்.இது பற்றி சங்க செயலாளர் கதிரேசனிடம் கேட்கலாம் என்றால் பதிலே இல்லை.