சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா என்று கேட்டு அவ்வைக்கே சோதனை கொடுத்தது ஒரு சிறுவன்தான். முருகனே பாலகன் வடிவில் வந்ததாக சொல்கிறது புராணம். ஒன்பது வயது சிறுமி சினிமாவுக்குப் பாடல் எழுதுகிறாள் என்றால் அவளை வாழ்த்தி வரவேற்கவேண்டும்.தமிழில் புலமை,சங்க இலக்கியத்தில் ஆர்வம் ,லண்டனில் வாழ்கிறாள் என்றால் அவள் நிச்சயம் ஈழத்துப் பெண்ணாகத் தான் இருக்கமுடியும்.அவர்கள்தான் தமிழை நேசிக்கிறார்கள். நாமோ …?
சரி சங்கதிக்கு வருவோம்.
இரண்டு முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றில் சதீஸ் நீநாசம் அறிமுகமாகிறார். (என்னய்யா பெயர் இது?) பரபரப்பாக பேசப்பட்ட கன்னட படமான ‘லூஸியா”என்ற படத்தில் நடித்தவர். இன்னொரு கதாபாத்திரத்தில் சரண் சஞ்சய் நடிக்கிறார். இவர், சுசீந்திரன் இயக்கி வரும் “ஏஞ்சலீனா”படத்தில் நடித்து வருகிறவர்.
கதாநாயகி மற்றும் அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் இப்படத்தின் படபிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது.
இந்த படத்துக்கு கூடுதல் சிறப்பாக , அனன்யா ராஜேந்திரகுமார் என்ற ஒன்பது வயது சிறுமியை பாடல் ஆசிரியையாக அறிமுகபடுத்துகிறார்கள் . லண்டனில் வசிக்கும்
இவரின் தமிழ் ஞானமும் சங்க இலக்கிய அறிவும் ஏற்கனவே பாடல்களாலும் கவிதைகளாலும் யு டியூபில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது .