ஒரு படம் பட்டையைக் கிளப்பவில்லை என்றால் அந்த படத்தின் டைரக்டரை இருட்டறையில் தள்ளிவிடுவார்கள்.
“நல்ல படம் கொடுத்தால் இதுதான் கதி போலும் ,நாமும் முரட்டுக்குத்துக்கு தயாராகிவிடவேண்டியதுதான் “என்று தரை லோக்கலுக்கு தயாராகிவிடுவார் அந்த டைரக்டர்.
இது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஸ்டைல்.
“ரெக்க”படம் பாக்ஸ் ஆபீஸ் இல்லேன்னாலும் நல்ல படம்தான் கொடுத்திருந்தார் டைரக்டர் ரத்ன சிவா.
அந்த டைரக்டரின் அடுத்த முயற்சிக்கு கிளாப் அடித்து ஊக்கம் கொடுத்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.
ஜீவா முக்கிய வேடத்திலும் சதீஷ் காமடி சைடிலும் பட்டையை கிளப்பும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. கிளாப் அடித்ததுடன் விஜயசேதுபதி நின்று விடவில்லை. “புது வருசத்தில நாம்ப சேர்ந்து படம் பண்றோம்”என்கிற உறுதியையும் கொடுத்திருக்கிறார்.
மனுஷன்யா!