பொல்லாத நேரம் சொல்லாம வரும்னு சொல்வாங்க. அது நடிகை மஞ்சு வாரியாருக்கு நடந்திருக்கிறது.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஜாக் அண்ட் ஜில் என்கிற படத்தில் நடித்து வந்தார், நாளை 7 ம் தேதியுடன் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது .
இந்த நேரம் பார்த்து நேற்று ஆக்சன் சீனை படமாக்கினார்கள். அதில் தவறி விழுந்து முன் நெற்றி பிளந்து விட்டது.
உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு நெற்றியில் தையல் போட்டிருக்கிறார்கள். கவலைப்பட எதுவுமில்லை என்பதாக டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
கவனமாக இருங்க தாயி!