பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஆண்டு தோறும் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு மற்றவர்களின் வயிற்றெரிச்சலை வாரிக்கொண்டு இருக்கிறது.
இந்த வருஷம் முடிவடைகிறதல்லவா அதான் வழக்கம்போல் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிற சல்மான் கானே இந்த வருடம் முதல் இடம். 253 கோடி வருமானம்
இரண்டாவது இடம் விராத் கோலிக்கு. வருஷ வருமானம் 2 2 8 கோடி.!
மூன்றாவது இடம் அக்சய்குமார்185 கோடி.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் இடம் இசை அமைப்பாளர் ரகுமானுக்குத்தான்.6 6 .7 5 கோடி.
ரஜினி 5 0 கோடியாம்.
நடிகைகளைப் பொருத்த வரை 15 .1 7 கோடி வாங்குகிற நயன்தான் முதலிடம். கேரளாவில் முதலிடம் மம்மூட்டிக்கு.!
இந்த புள்ளி விவரத்தை எப்படி திரட்டினார்களோ தெரியாது. ஆனால் ஒரு படத்துக்கு நாற்பது கோடி வாங்குகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்களே. அதுவும் ஆண்டுக்கு பல படங்கள் பண்ணுகிறார்களே.
சூப்பர்ஸ்டாரின் வருஷ வருமானம் ஐம்பது கோடிதானா ,?