கடைக்குட்டி சிங்கத்தின் கர்ஜனைக்குப் பிறகு தேவ் படத்தில் பிசியாகி விட்ட கார்த்தியின் அடுத்த படம் என்ன?
அந்த சைடிலிருந்து எந்த செய்தியும் காணலியே என்று பார்த்தால் பிரமாண்டமான படத்துக்கான வரைபடம் தயாராவது தெரிந்தது.
மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படத்துக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.
கார்த்தியின் தேவ் படம் தியேட்டர்களை தொட்டதும் புதிய படத்தின் வேலை ஆரம்பமாகி விடும். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ரெடி. இசை சாம் சி.எஸ். பிறகென்ன ட்ரீம் வாரியர்சின் தயாரிப்பு என்கிறபோது வேட்டு சத்தத்துக்கு கேட்க வேண்டுமா என்ன!