தமிழரின் வீர விளையாட்டை சொல்கிறோம் என்று சொல்லி சட்டையை கிழித்து விட்டார்கள். அந்த காலத்தில் கபடியை விளையாடிவிட்டுத்தான் ஜல்லிக்கட்டுக்கு போவார்களாம். இப்படி ஒரு கருத்தை இயக்குநர் ஐயப்பன் பதிவு செய்திருக்கிறார்.
அபிலாஷ் மற்றும் நண்பர்கள் தோனியின் தீவிர விசிறிகள். கிரிக்கெட் என்றால் உயிர் இவர்கள் தினமும்விளையாடி வந்த கிரவுண்டு விலை பேசப்படுகிறது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். அதைவிட நமக்கு அதிர்ச்சி அவ்வளவு பெரிய கிரவுண்டு வெறும் மூணு லட்சம்தானாம். அந்த கிரவுண்டை அவர்களே வாங்குவதற்கு முடிவு செய்கிறார்கள்.படாதபாடு படுகிறார்கள்.கபடி மேட்ச்சில் வெற்றி பெற்று கிரவுண்டை வாங்குகிறார்கள்.,கிரிக்கெட் வீரர்கள் எப்படி கபடி வீரர்களாக மாறி தமிழர் கலையை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை,!
கதையின் நாயகன் அபிலாஷ்,நாயகி லீமா உள்பட அனைவருமே நிறைய படிக்க வேண்டியதிருக்கிறது. மகேந்திரனின் இசை தேவலாம்.
தோனி மன்னிப்பாராக.!