பாலிவுட் பாடகர் மிகா சிங்.
பார்ட்டி சிங்கர்.
துபாயில் கச்சேரி.
போன இடத்தில் அடங்கி ஒடுங்கி இருக்க வேணாமா?
“ஹலோ துபாய்.! கச்சேரி பண்ண வந்திருக்கிறேன்!மசாலா அவார்ட் பங்ஷனில் சந்திக்கலாம் வாங்க!”என இன்ஸ்டாகிராமில் அழைப்பு விட்டவர் அப்படியே பிரேசிலை சேர்ந்த பதினேழு வயசுப் பெண்ணுக்கு ஆபாசப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
போலீசில் புகார் செய்யவே கைதாகிவிட்டார். இந்திய தூதரகம் தலையிட்டு அழைத்து சென்றிருக்கிறது. அவரை முறைப்படி அபுதாபி நீதிமன்றத்துக்கு போலீஸ் அழைத்து சென்றிருக்கிறது.