“இன்பநாளிது இனிய நாளிது ” என தொடக்கத்திலேயே நல்லதை கொடுப்பவர் கலைப்புலி தாணு.
“நலிந்த படங்களுக்கு இவர் ஓர் ஆக்சிஜன் சிலிண்டர்” என்பதுடன் கைராசியானவர் என்கிற சிறப்பும் இவருக்கு உண்டு !
பிறர் அறியாமல் உதவி செய்யக்கூடியவர்.
சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இவரளவுக்கு யாரும் விளம்பரம் செய்ததில்லை என்கிற பெருமை உண்டு.பிரமாண்டங்களின் நாயகன் என சொல்லலாம்.
இவரது சமீபத்திய தயாரிப்பு ‘துப்பாக்கி முனை!’
நடிகர் திலகத்தின் குடும்பத்திலிருந்து வந்திருக்கிற இளம் கதாநாயகன் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரி என்ட்ரியாகிற ஹன்சிகா நடித்திருக்கிறார்.
தினேஷ் செல்வராஜின் இயக்கத்தில் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கிற இந்த படத்தில் வெயிட்டான எம்.எஸ்.பாஸ்கர்,வேல.ராமமூர்த்தியும் இருக்கிறார்கள்.
விக்ரம் பிரபுவுக்கு இது முக்கியமான படம். அதிகமாக டூப்புகளை நாடாமல் ஆக்சன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பவருக்கு ஒளிப்பதிவாளர் ராசமதி உற்ற துணையாக இருந்திருப்பார் என்று நம்பலாம்.
“அந்த தம்பியை உயரமான இடத்தில் உட்கார வைக்கணும் “என்று இவரைப்பற்றி தாணு அடிக்கடி சொல்வார். இந்த துப்பாக்கி முனை விக்ரம் பிரபுவுக்கு ஏணியாக இருக்கும் என்பதற்கு முத்து கணேஷின் இசையும் சாட்சி.