“கிண்டி ராஜ்பவன் சாலையை ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கு ஐடியா கொடுத்தது அடியேன்தான் “என்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ்மேனன். இவர் சொன்ன பின்னர்தான் ஒரு வழிப்பாதையாக மாறியதாம். மகிழ்ச்சி.
இவர் அடிக்கடி தலைமைச்செயலகம் பக்கம் செல்வதற்கு காரணமே ஐடியாக்களை சொல்வதற்குதான் என்கிறார்.
இந்த சமூக சேவகருக்கு பெரிய மனக்குறை இருக்கிறது.
“சமூக நல ஐடியாக்களை சொல்வதற்காக பிரதமர் மோடியிடம் டைம் கேட்டேன். பதிலே இல்லை”என்கிறார்.
அட அவரை விடுங்க சார் , “நம்ம கமல்,ரஜினி ஆகியோரிடம் சமுதாய நலம் தொடர்பாக பேச நேரம் கேட்டேன்.அவர்கள் மறுத்து விட்டார்கள் .இவர்கள் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள் “என கேட்கிறார் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர்.