
இந்த காதல் என்பது எந்த வயசிலும் வரலாம் எத்தனை தடவையும் வரலாம்.ஒருதடவைதான் வரணும் என்கிற கட்டுப்பாடு எதுவும் இல்லை.
வாழும் உதாரணங்கள் நிறைய உண்டு.
சினிமா உலகும் இதற்கு விதி விலக்கு இல்லை.!
“எனக்கு சின்ன வயதில அதாவது படிச்சிட்டு இருந்தபோது அஜித் மீது ‘கிரஷ் ‘ இருந்தது.”என்கிறார் பார்வதி நாயர்.
“இப்ப யாரையாவது காதல் பண்றீங்களா?”
“என்ன இப்படி கேட்கிறீங்க. காதல்ங்கிறது நாம்ப தேடிப் போறதில்ல.வரணும். ரெண்டு பேர் மனசிலும் அடி மனசில் பிறக்கணும்.அதாங்க காதல்.!”என்கிறார்.




