நாற்பதுகளில் தமிழ்நாட்டில் மூன்று நாள்,ஐந்து நாள் கல்யாணம் என பணக்காரர்கள் அமர்க்களப்படுத்துவார்கள்.
அதைப்போல நடிகை பிரியங்க சோப்ராவும் தன்னுடைய காதல் கல்யாணத்தை இந்திய,கத்தோலிக்க முறைப்படி ஐந்து நாள் நடத்தி அமர்க்களப்படுத்தி விட்டார். கல்யாணச்செலவை கணக்குப் போட்டால் கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.
கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருந்த பணம், அவருடைய சந்தோஷத்துக்கு செலவு பண்ணுவதில் என்ன கஞ்சத்தனம்?
நடத்தி முடிச்சிட்டா மகராசி! பொறுக்கல ஒரு பெண் எழுத்தாளருக்கு!
தி கட் என்கிற பத்திரிகையில் மரியா ஸ்மித் என்கிற எழுத்தாளர் கல்யாணப்பொண்ணு பிரியங்காவை ஒரு காய்ச்சு காய்ச்சி விட்டார்.
‘இனவெறி புடிச்சவ, கவர்ச்சி காட்டும் நடிகை ,ஊழல் என்றெல்லாம் எழுதித்தள்ளிவிட்டார்.
நல்லபடியா நடந்த கல்யாணத்தில நாறவாய் சிறுக்கி நலுங்கு வச்ச கதையாகிப்போச்சு.
இப்படிஎல்லாம எழுதுவாங்க என்று கண்டனங்கள் பறந்தன.
எழுத்தாளர் மரியா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு வருத்தமும் தெரிவிக்க வேண்டிய கட்டாயம்.
ஆனால் பிரியங்காவின் அம்மா மது சோப்ராவுக்கு ஆத்திரம் அடங்கல.
“கழுதைகளுக்கு என்ன தெரியும்?”என்று ஒற்றை சொல்லில் அடக்கிக்கொண்டார்.