திரையுலக பிரபலங்கள், பெரும்பாலும் தங்களது காதலை வெளியில் சொல்வதில்லை. முதலில் மறுப்பதும் வேறு வழியில்லாத பட்சத்தில் ஆமாம் ,எங்கள் காதல் உண்மைதான்.கல்யாணமும் உண்மைதான் ! என்பார்கள். ஆனால் நடிகை டாப்சியின் கதையே வேறு மாதிரி இருக்கிறது. டாப்ஸி,டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ்போ என்பவரை தீவிரமாக காதலிப்பதாகவும் இருவரும் ரகசியமாக ஒன்றாகவே ஊர் சுற்றுகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து டாப்சியிடம் கேட்டபோது, “சில திரையுலக பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரியாமல் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது இப்போதுதான் எனக்கும் புரிகிறது. என் திருமணம் சில ஆண்டுகள் கழித்துதான் நடைபெறும். ஆனால் எல்லாருக்கும் தெரியும் வகையில் நடக்காது. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில், ரகசியமாக நடக்கும்,” என்கிறார்.