அனேகமாக காஜலுக்கு ஷங்கரின் இந்தியன் 2 தான் கடைசிப்படமாக இருக்கக்கூடும். தெலுங்கில் அவர் வெகுவாக நம்பி இருந்த ‘கவசம்’ படம் பொய்யாக்கிவிடும் போலிருக்கிறது.
படத்தின் ஹீரோவுக்கு அந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லாது போயிருக்கிறது. இந்த நிலையில் காஜலை கவசமும் கவிழ்த்தி விடுமானால் இது அவரது ஐந்தாவது பிளாப் ஆகிவிடும்.
ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள தெலுங்கு தயாரிப்பாளர்கள் யோசனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். காஜலுக்கும் கல்யாண ஆசை வந்திருக்கிற நிலையில் இந்தியன் பட வாய்ப்பு வந்து கை கொடுத்திருக்கிறது. இதனால் ஷங்கரின் படம் முடிந்ததும் காஜலுக்கும் குரு பார்வை வந்துவிடும்.!அப்புறம் என்ன டும் டும் தான்!