“அரசியலுக்கு வாரேன்னு சொல்லியாச்சு. தலையையும் காட்டியாச்சு. இனிமே தலையை உள்ளுக்கு இழுத்தம்னா நத்தைக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?” என்று நினைத்தாரோ என்னவோ ஏஆர் .முருகதாசின் அடுத்த படத்தில் முதல்வராக நடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சம்மதம் சொல்லிவிட்டதாக ஆந்திரா வரை பேசுகிறார்கள். பிஜேபியிடம் சம்மதம் வாங்காமலா ஓகே சொல்லியிருப்பார் என்கிறார்கள் உள்விஷயம் தெரிந்தவர்கள். பேட்ட ரிலீசுக்குப் பிறகு ஷூட்டிங் ஆரம்பம் என்கிறார்கள். ஒரு எழுத்தாளனின் கோபம் அவனது கதா பாத்திரங்கள் வழியாக வெளிவரும் என்று சொல்வார்கள். முருகதாசை ஆட்சி அதிகாரம் வழியாக மிரட்டியவர்களுக்கு தனது பேனா வழியாக இந்த படத்தில் இடி,மின்னலை இறக்குவார் என எதிர்பார்க்கலாம். போராட்டம் இல்லாமல் போர் அடித்துப் போயிருக்கும் வெள்ளைச்சட்டைக்காரர்களுக்கு பேனர் கிழிக்கும் வேலை காத்திருக்கிறது என நம்பலாம்.