சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கஞ்சா கருப்பு. இயக்குநர் பாலாவின் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். கஞ்சா கருப்பு இன்று சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னைஅடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்இதுதொடர்பாக அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரியும் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்கிறார் கஸ்தூரி .