தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இதுவரை சுமார் 1௦௦௦ படங்களுக்கும் மேல் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டவர் வினுசக்கரவர்த்தி. கடந்த சில மாதங்களாகவே நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர்,கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென்று ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் அதிகமானதில் வினுசக்கரவர்த்தி மயங்கி விழுந்தார், உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாகவே நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை, தேமுகா தலைவரும்,நடிகருமான விஜயகாந்த், மற்றும் சமத்துவமக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் ஆகியோர் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர்.