தில்லாலங்கிடி வேலைகளில் கில்லாடி நடிகர் சீனிவாசன். தனக்குத்தானே பவர் ஸ்டார் என்பதாக பட்டம் வைத்துக்கொண்ட இவர் திகார் சிறைக்குப் போய் திரும்பியவர்.
பல வழக்குகள் இவர் மீது இருந்தாலும் அதையெல்லாம் எப்படியோ சமாளித்து வருகிறார்.
அண்மையில் இவரைக் காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி புகார் செய்ய கடத்தி இருக்கலாம் என்கிற நிலையில் போலீஸ் விசாரணை செய்தது.
ஆனால் தேனியை சேர்ந்த ஒருவரிடம் வாங்கிய கடனை செட்டில் செய்வதற்காக ஊட்டியில் உள்ள நிலத்தை விற்பதற்கு சீனி ஊட்டி சென்றிருக்கிறார்.இதுதான் மேட்டர். இன்று அண்ணா நகர் போலீஸ் நிலையம் வந்த சீனி எல்லா விவரங்களையும் சொல்லி இருக்கிறார். எப்படியெல்லாம் விளம்பரம் தேடுகிறார்கள்.!