“இந்த சமூகத்தில் நடப்பவைகளைப் பார்க்கிறபோது கோபம் வருகிறது” என்கிறார் இயக்குநர் ஷங்கர்.
பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்களில் சமூக அக்கறை அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும். அதனால்தானோ என்னவோ , அவருக்கு பிடித்த வசனம் இதுதானாம்.
“மத்த நாடுகளில் கடமையை மீறுவதுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டியதிருக்கு. இங்க மட்டும்தான் கடமையை செய்றதுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கு”
இந்த வசனம் அவரது பட வசனம்தான்!
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனின் கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் இது.
இவரது படங்களுக்கு பெரும்பாலும் இசை அமைப்பு ஏஆர்.ரகுமான்தான். ஆனால் “இளையராஜாவின் எல்லாப் பாடல்களும் எனக்கு பிடிக்கும்”என்கிறார் ஷங்கர் .
“உங்களின் படங்களில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு அளிப்பதில்லையே ஏன்?”
” என் மீது இருக்கிற தவறான பிம்பம். தமிழ் நடிகைகளின் கால்ஷீட் கிடைப்பதில்லை. மீனா,சினேகா ஆகியோர் என் படங்களில் நடிக்கவேண்டியவர்கள். கால்ஷீட் கிடைக்கல அதனால் வேற நடிகைகளை நடிக்கவைக்கவேண்டியதாகி விட்டது.” என்கிறார்.