எல்லோருக்கும் அம்மா என்றால் தனி அக்கறை இருக்கும்.
அம்மாவுக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள்.
அப்படி தளபதி விஜய்யும் இருந்ததில் ஆச்சரியமில்லை.
விஜய்யும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவும் கல்லூரி காலத்து நண்பர்கள். பிட் அடிப்பதில் தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. சஞ்சீவ் ஒரு சுவையான சம்பவத்தை சொன்னார்.
அதாவது ஒரு படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை தளபதி விஜய் வாங்கியதும் அம்மாவுக்கு புடவை வாங்கவேண்டும் என்று விரும்பினாராம்.தப்பில்லை.
உடனே அம்மாவுக்கு போன் பண்ணி “அம்மா உங்க புடவை சைஸ் என்னம்மா?” என்று கேட்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஆறு கஜம்,எட்டு கஜம் என்கிற அளவில் புடவை கட்டுகிற பழக்கம் இருந்தது.
அந்த பழைய காலத்தை நினைத்து இப்படி கேட்டாரோ என்னவோ ஆனாலும் புடவையின் சைஸ் கேட்ட ஒரே ஆள் நம்ம தளபதி.