பேட்ட படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இயக்குநரும் நடிகருமான சசிகுமார் பேசியதாவது:
ரஜினி சாரோட படத்தையெல்லாம் முதல் நாள், முதல் ஷோ பார்த்த அவரோட ரசிகன் . அவரை அண்ணாந்து பார்த்தவன் நான். அவ்ளோ உயரத்துல இருக்கற சூப்பர் ஸ்டாரோட நானும் நடிச்சிருக்கேன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு.
படம் நினைச்சதை விட சீக்கிரமே முடிஞ்சிருச்சு. ரஜினி சாரை பாத்துக்கிட்டே இருக்கலாம். அவரைப் பாக்கப் பாக்க ஒரு எனர்ஜி வந்துரும் நமக்கு. நான் அவருடன் 20 நாட்கள் வேலை செய்தேன். என்னடா படப்பிடிப்பு அதற்குள் முடிகிறதே என்று வருத்தமாக இருந்தது. இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாமேனு தோணுச்சு.ரஜினிசார், ரொம்ப தோழமையா பழகினார். ரொம்ப எளிமையா, சாதாரணமா பழகினார். அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார், கேரவனுக்குள்ளே போய் ரெஸ்ட் எடுக்காம, காஸ்ட்யூம் மாத்தக்கூட போகாம, அவ்ளோ எளிமையா இருந்தார். ஆச்சரியமா இருந்துச்சு.எனக்கு டான்ஸ் வராதுன்னு ரஜினி சார் சொன்னார். ஆனா அது உண்மையில்ல. அவ்ளோ ஸ்டைலா ஆடினார். 4 மணிக்கு ஷூட்டிங். ரெண்டரைக்கே வந்துட்டாரு. இத்தனைக்கும் மழைல அந்தப் பாட்டு ஷூட்டிங் நடந்துச்சு. கொஞ்சம் கூட முகம் சுளிக்காம ஆடிட்டுப் போனார் .அவரோட பழைய கதைகளையெல்லாம் சொன்னப்ப ரொம்பவும் பிரமிப்பா இருந்துச்சு. சும்மா இந்த உயரத்துக்கு வந்துடலை. வரவும் முடியாது. அவ்ளோ உழைப்பு,ஈடுபாடு. அது இருந்ததாலதான் அவர் இன்னிக்கி சூப்பர் ஸ்டார். ரஜினி சாரோட ஸ்டைலான ஆட்டத்தைப் பாத்துதான், நாங்க அதை பாலோ பண்ணி, ஆடிட்டிருக்கோம்.பேட்ட அருமையா வந்திருக்கு. ஒரு ரசிகர் ரசிச்சு ரசிச்சு படம் எடுத்தா எப்படியிருக்கும்? கார்த்திக் சுப்பராஜ் அப்படித்தான் எடுத்திருக்கார்.ரஜினி சாருக்கு ஒரேயொரு வேண்டுகோள். ரஜினி சார்… நீங்க படங்களை நிறுத்தாமல்நடிச்சிக்கிட்டே இருக்கணும் சார். அமிதாப் மாதிரி தொடர்ந்து படங்கள் பண்ணிக்கிட்டே இருக்கணும்.இவ்வாறு சசிகுமார் பேசினார்.