“நடிச்சது போதும். அரசியலுக்கு வந்திருங்க !”என்று சூப்பர் ஸ்டார் ரஜினியை கையைப் பிடித்து இழுக்காத குறையாக ரசிகர்கள் வா வா என இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் அவர் அரசியலுக்கு வருவதற்கு தயாராகி விட்ட கட்டத்தில் “நீங்கள் தொடர்ந்து நடிங்க என்று சொன்னால் எப்படி இருக்கும்?
“அமிதாப்பச்சன் இன்னமும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை மாதிரி ரஜினி சாரும் தொடர்ந்து நடிக்கணும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார் நடிகர்,இயக்குநர் சசிகுமார்.
சூப்பர் ஸ்டார் கேட்பாரா?