தமிழ்த் திரையுலகில் 1993-ல் ‘பொன்விலங்கு ‘படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரஞ்சித்! தொடர்ந்து சிந்துநதிபூ,மைனர் மாப்பிள்ளை,அவதாரபுருஷன்,உள்ளிட்ட படங்களில்நடித்தவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் கிடைத்த வேடங்களில் நடித்து வந்தார்.இதற்கிடையே நடிகை ப்ரியா ராமன் அவரை காதலித்தார். அந்தக் காதல் கல்யாணத்திலும் முடிந்தது. அதே வேகத்தில் இருவரும் பிரிந்தனர் விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர்.இதையடுத்து யாரும் எதிர்பாரா வண்ணம் நித்யானந்தாவின் சிஷ்யையாக இருந்த ராகசுதாவை(பேஸ்புக் மூலம்நட்பு ஏற்பட்டு காதலானதாம்!) காதலித்து இரண்டாவதாக திருமணமும் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இதுவும் அவருக்கு நீடிக்க வில்லை என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.ஆம்! இவருக்கும் ராகசுதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு சென்றுள்ளாராம் ராகசுதா!