படத்தின் புரமோஷனுக்காக மேடையேறும் ஒவ்வொரு பிரபலத்திடமும் “ஹீரோவை பத்தி சொல்லுங்களேன், அவர் பேசின டயலாக்க பேசிக் காட்டுங்களேன்” என இப்படி பல விதத்திலும் படத்திற்கான விளம்பரத்தை தேடி விடுவார்கள்.
அதற்கு தொகுப்பாளர்கள் ஆதவன் மாதிரி கெட்டிக்காரர்களாக இருக்க வேண்டும்!
இப்படித்தான் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி ஒவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு வாங்கினார் அந்த தொகுப்பாளர். சிவாஜி,எம்.ஜி.ஆராக இருந்தாலும் ரஜினியின் வசனத்தைப் பேச சொல்லியிருப்பார்கள் போல.!
ரஜினி பட டயலாக்கை சசிகுமார் சொன்னார்.
சிம்ரன் சந்திரமுகி நடனம் கொஞ்சம் ஆடினார்.
ஆனால் மக்கள் செல்வன் விஜயசேதுபதியிடம் கெஞ்சிப் பார்த்தும் அது நடக்கவில்லை. சும்மா சொல்லக்கூடாது. விஜயசேதுபதி அரங்கத்தில் நுழைந்ததுமே அப்ளாஸ் அள்ளியது. ரஜினி உள்பட எல்லோரும் எழுந்து நின்று வரவேற்றார்கள்.
விஜயசேதுபதியிடம் ரஜினி மாதிரி நடிக்க ,வசனம் பேச சொன்னார் தொகுப்பாளர். அதற்கு நெற்றிப் பொட்டில் அடித்தது மாதிரி “எனக்கு யாரை மாதிரியும் நடிக்கத் தெரியாது,என்னை மாதிரிதான் நடக்கத் தெரியும் .மிமிக்ரி கூட பண்ணத் தெரியாது”என்று கெத்தாக சொல்லிவிட்டார். கூட்டம் ஆர்பரித்து வரவேற்றது.