கல்யாண வீடாவது கருமாதி வீடாவது, அவனுக்குத் தெரிந்தது சொம்பு எங்கே இருக்கு எனத் தேடுவதுதான்!
காரியத்திருடன் கண்ணு அதன் மீதுதான் இருக்கும் என்பதைப் போல நடிகர் மன்சூரலிகானுக்கும் கான்ட்ரவர்ஸி மேலதான் நோக்கம் போகும்.!
ஹசிம் மரிகர் என்கிற கேரளத்து தயாரிப்பாளர் இயக்கிஇருக்கிற படம் ‘உன் காதல் இருந்திருந்தால்’
இதில் ஸ்ரீ காந்துடன் முரட்டுக்குத்து நடிகை சந்திரிகா ரவியும் நடித்திருக்கிறார். இவர்களுடன் சோனா,காயத்ரி,ரியாஸ்கான் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு பாடல்களை வெளியிட்ட இந்த விழாவில் முக்கிய பேச்சாளி மன்சூர்தான் என்றதும் “ஆகா,, பெருச்சாளி பொந்து வைக்கப்போகிறது “என்பது புரிந்தது.
எதிர்பார்த்தபடியே பெரிய பொந்தாக தோண்டி விட்டது.
அரசாங்கத்துக்கு சொல்ல வேண்டிய ‘மிரட்டலை’எல்லாம் இந்த விழாவில் வைத்தார் மன்சூர்.
குறிப்பாக அவரது எய்ம் சூப்பர் ஸ்டார் ரஜினியாகத்தான் இருந்தார்.
“1000,2000 என்றெல்லாம் காசு கொடுத்து படம் பார்க்கப்போகிறார்கள். படம் பார்க்க போகிறார்களா அல்லது வேறு எதற்காகவும் போகிறார்களா? பிராஸ்டிடியூசனா நடக்கிது?அதுக்குதான் அவ்வளவு காசு கொடுப்பார்கள்.
அரசு நிர்ணயித்த 160 ரூபாய்க்கு மேல் அதிகமாக யார் வித்தாலும் நானே அங்கே வருவேன்.உதைப்பேன்.
குவார்ட்டருக்கு நிர்ணயித்த விலைக்கு மேல எவனாவது வித்தா கலாட்டா பண்றேல்ல, சினிமா டிக்கெட்டுக்கு மட்டும் ஏன் அவ்வளவு காசு?” என்று காட்டமானவர் ,நைசாக எம்.ஜி.ஆர். இப்படியெல்லாம் ஆயிரம் ரெண்டாயிரம்னு டிக்கெட்ட வித்து சி.எம்.பதவிக்கு வரல.”என்று குத்து விடவும் செய்தார். அவர் ரஜினியைத்தான் மறைமுகமாக சொல்கிறார் என்பது தெரியாமலா போகும்?
இந்த விழாவில் இன்னொரு கொடுமையும் நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குணா என்பவர் நடிகை சந்திரிகாரவியை ‘சூப்பர் பிகர்,குத்தாட்டக்காரி ‘என்றெல்லாம் சொன்னது தரம் தாழ்ந்து போனதாகவே இருந்தது. இதற்கு நடிகையிடம் ஸ்ரீகாந்த் பொதுவாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனால் “அப்படி சொன்னதில் தப்பில்லை” என்று மன்சூர் சொன்னது தான் வக்கிரத்தின் வெளிப்பாடு! சினிமாக்காரர்கள் சொல்லிக்கொள்ளலாமாம் .
அடா அடா தமிழ் உணர்வே !