காச்சப்பாடில் கிடந்தவனுக்கு பிரியாணி கிடைத்தால்,அதுவும் வான் கோழி பிரியாணி கிடைத்தால்..? சொல்லவும் வேணுமா!
அன்றைய தினம் அவனுக்கு திருவிழாதான்!
ஆளாளுக்கு போஸ்டர்,வீடியோ ஆடியோ என மரணமாஸ் காட்டும் போது நம்ம தல இன்னும் மாஸ் காட்டலியே என்கிற வருத்தம் வெறி ஏறிக்கிடக்கும் ரசிகர்களுக்கு இருக்கத்தானே செய்யும்.
“டோன்ட் ஒர்ரி கவலைப்படாதே தோழா! இன்னிக்கி ஏழு மணிக்கு அடிச்சி தூக்குறோம் என இசை அமைப்பாளர் இமான் ‘சிங்கிள் விடப்போவதாக அறிவித்திருக்கிறார்.
விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்குறோம் பாடலை கவிஞர் விவேகா எழுதி இருக்கிறார். புரியும் தமிழில்தான் எழுதி இருப்பார் என்று நம்பலாம்.