நடிகர்கள் தம் அடிக்கிற மாதிரி போஸ்டர் வந்தாலே முண்டாசு கட்டிக்கிட்டு முஷ்டியை காட்டிக்கிட்டு அறிக்கைகள் விட்டு அதகளம் பண்ணும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாயது பொத்தி மெய்யது அடங்கி விடுமோ என்னவோ தெரியவில்லை.
சர்கார் படத்து போஸ்டருக்கு விவகாரம் பண்ணியதெல்லாம் தெரிந்திருந்தும் ஹன்சிகா வாய் நிறைய புகையை விடுகிறார் கஞ்சா அடிக்கிற ஸ்டைலில்! .
தைலாபுரம் தோட்டத்து ஐயா வாயைத் திறக்கமாட்டார் என்கிற நம்பிக்கையோ என்னவோ!.
அவரது டார்கெட் தளபதி விஜய்தானே! மஹா படத்தில் சாமியார் வேடத்தில் தம் மாரோ தம் மாகி இருக்கிறார் ஹன்சிகா.கண்டுக்கவே மாட்டாங்க என்கிற நம்பிக்கை.தாய்க்குலத்தின் ஓட்டுகளை நம்பி இருக்கிற அரசியல் கட்சிகள் ஹன்சிகாவை எதிர்க்குமா என்ன?