சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிப்பதே இங்கு பிஜேபி காலூன்றுவதற்குத்தான் என்கிற கருத்து இருந்து வருகிறது.
ரஜினியின் வலுவான ஆதரவாளர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு பிஜேபி போட்ட நீண்ட நாள் திட்டம்.!
எவ்வித பிடிப்பும் இல்லாத பிஜேபிக்கு தமிழகத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் மட்டுமே!.
பிஜேபியின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரே சக்தி ரஜினிதான்! “வலுவான சக்தி மோடி”என நம்புகிறார் .
மோடி அலை வீசுகிறது என பிஜேபியினர் சொல்லி வந்த நிலையில் “இல்லை .மோடியின் மாயவலை அறுந்தது”என்பதை 5 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்கிறார்கள்.
இந்த முடிவுகள் ரஜினியை சிந்திக்க வைக்கும் என்று நம்பலாம்.
பிஜேபியின் மதவெறிக்கு கிடைத்திருக்கிற மரண அடி என்பதாகவே சொல்லலாம்.
ஊழலுக்கு எதிராக போராடவேண்டிய கடமை ரஜினிக்கு இருக்கிறது. தமிழக மக்களும் அதையே விரும்புகிறார்கள்.
“எழுதிக் கொடுத்த வசனத்தை பேசினேன்.அவை எனது கருத்து இல்லை”என முன்னர் சொன்னதைப் போல இனியும் பேச முடியாது. ரஜினி தனது பிஜேபி சார்பு நிலையில் இருந்து மாறவேண்டும் ,தனித்து செயல்படவேண்டும் என்பதை 5 மாநில இடைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக கருதலாம்.