கழுத்துக்கு கத்தி வந்த நிலையில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் பாக்யராஜ்.
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பதவியை விட்டு விலகியவர் மீண்டும் தேர்தல் நடத்தி பதவிக்கு வருவதையே விரும்பினார்.
சங்கத்தில் நடந்திருக்கும் நிதி மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என போராடிய நிலையில்தான் சன் நிறுவனம் தயாரித்த சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று துணை இயக்குநரும் எழுத்தாளர் சங்க உறுப்பினருமான வருண் ராஜேந்திரன் போர்க்கொடி பிடித்தார்.
இதை விசாரித்து சர்கார் கதைக்கும் வருண் ராஜேந்திரன் கதைக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டது சங்கம்.
நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்று வீரம் பேசினார் இயக்குநர் ஏஆர்.முருகதாஸ்.பின்னர் வருண் ராஜேந்திரனுடன் இணக்கமாக செல்ல உடன்பட்டு சர்கார் படத்தின் தொடக்கத்தில் கார்டும் போட்டார்.
இந்த சமயத்தில்தான் செல்வாக்கான அந்த தொலைக்காட்சி நிறுவனம் பாக்யராஜ்க்கு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு சீரியல்களில் வாய்ப்பு அளிக்கக்கூடாது என தயாரிப்பாளர்கள் நிரப்பந்தம் செய்யப்பட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இதன் காரணமாக பாக்யராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து பணிந்து போனாராம்.. இதன் பின்னரே சீரியல் வாய்ப்பு அவரது மனைவிக்கு கிடைத்திருக்கிறது .
எழுத்தாளர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாகியதாம்.. இதனால் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாக்யராஜ் தலைமை அவசியம் என நிர்வாகிகள் நினைத்திருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாக தற்போது சங்கத்தை விட்டு விலகி இருக்கிறார்கள்
.பாக்யராஜ் தனது விலகல் கடிதத்தை திரும்ப பெற்றால் தாங்களும் திரும்பப் பெறுவதாக சொல்லி இருக்கிறார்கள். இதன் பின்னரே பாக்யராஜ் தனது விலகல் கடிதத்தை திரும்பபெற்று தலைவராகி விட்டார் என்கிறார்கள்.